இன்று தொடங்குது ஐபிஎல் திருவிழா: முதல் வெற்றி சென்னைக்கா, மும்பைக்கா? ஓர் அலசல்!

இன்று தொடங்குது ஐபிஎல் திருவிழா: முதல் வெற்றி சென்னைக்கா, மும்பைக்கா? ஓர் அலசல்!
இன்று தொடங்குது ஐபிஎல் திருவிழா: முதல் வெற்றி சென்னைக்கா, மும்பைக்கா? ஓர் அலசல்!

எதிர்பார்த்துக்கொண்டிருந்த பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, வந்தேவிட்டது. இன்று முதல் மே 27-ம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டிகளில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிந்ததும் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். 

முதல் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும் மோதுகின்றன. சூதாட்ட பிரச்னை காரணமாக விதிக்கப்பட்ட 2 வருட தடைக்குப் பின் சிஎஸ்கே களமிறங்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா, வெய்ன் பிராவோ, டு பிளிசிஸ், ரவீந்திர ஜடேஜா என்று அணியில் முன்பிருந்த வீரர்கள் சிலர் இப்போதும் இடம் பிடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஷேன் வாட்சன், முரளி விஜய், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ் போன்ற அனுபவ வீரர்களும் இருக்கிறார்கள். 

அனுபவம் வாய்ந்த டோனிக்கு இதில், அதிரடி காட்ட வேண்டிய அழுத்தம் இருப்பதால் அவர் முன் வரிசையில் இறங்கி ஆட வாய்ப்பிருக்கிறது. ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (413 ) வீழ்த்திய பிராவோவைதான் சென்னை அணி, அதிகம் நம்பி இருக்கிறது. அவர் கலக்கினால், சென்னை கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.

சீனியர்கள் அணி!

ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் குறைந்தது ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான். 2010, 2011-ம் ஆண்டுகளில் கோப்பை வென்ற சிஎஸ்கே-வை இந்த வருடம் சீனியர் வீரர்களே ஆக்கிரமித்திருக்கிறார்கள். இது விமர்ச னத் துக்குள்ளாகி இருக்கிறது. ‘சீனியர்களின் அனுபவம் கைகொடுக்கும்’ என்று நம்புகிறது அணி. இதை அடித்துச் சொல்கிறார் பயிற்சியாளர் பிளமிங்!

அணி விவரம்:

பேட்ஸ்மேன்கள்: 
தோனி, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், அம்பதி ராயுடு, ஜகதீசன், முரளிவிஜய், ஷர்மா, துருவ் ஷோரி, சாம் பில்லிங்ஸ்,  டு பிளிசிஸ்.

ஆல் ரவுண்டர்கள்:
ஜடேஜா, மோனு குமார், சைதன்யா பிஷ்னோனி, பிராவோ, வாட்சன்

ஸ்பின்னர்கள்:
ஹர்பஜன் சிங், கரண் சர்மா, இம்ரான் தாஹிர்

வேகப்பந்துவீச்சு:
ஷர்துல் தாகூர், தீபர் சாஹர், கனிஷ்க் சேத், ஆசிப், லுங்கி நிகிடி, மார்க் வுட்


பலம் வாய்ந்த மும்பை

மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. பலம் வாய்ந்த அணியாக அது இருக்கிறது. ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், குணால் பாண்ட்யா, அசத்தும் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, முஸ்தாபிஜூர் ரஹுமான் உள்ளிட்டோர் அந்த அணிக்கு பலம் சேர்க்கிறார்கள். இளம் அதிரடி வீரர்களான இஷான் கிஷான், லெவீஸ் ஆகியோர் அதிரடியில் மிரட்டுபவர்கள். இவர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாகவும் ரோகித் அடுத்த வரிசையில் இறங்கவும் வாய்ப்பிருக்கிறது

சென்னை-மும்பை அணிகள், இதுவரை 22 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் 10-ல் சென்னையும், 12-ல் மும்பையும் வெற்றி பெற்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் 7 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 5-ல் மும்பையும் 2-ல் சென்னையும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும். இந்த ஐ.பி.எல். தொடரில் டி.ஆர்.எஸ். முறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

மும்பை அணி விவரம்:

பேட்ஸ்மேன்கள்
ரோகித் சர்மா, இஷான் கிஷான், லெவிஸ், சித்தேஷ், சூர்யகுமார் யாதவ், ஆதித்யா தாரே, சவுரப் திவாரி, ஷரத் லும்பா.

ஆல் ரவுண்டர்கள்
ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்டியா, அங்குல் ராய், தஜிந்தர் சிங், பொல்லார்டு, பென் கட்டிங், டுமினி

ஸ்பின்னர்கள்
ராகுல் சாஹர், அகிலா தனஞ்செயா, மயங் மார்க்கண்டே.
 
வேகப்பந்துவீச்சு
பும்ரா, சங்வான், நிதீஷ், மோஷின் கான், பேட் கம்மின்ஸ், மெக்கலஹன்

ஆட்டம் பாட்டம்!

இன்று மாலை 6.15 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா நடைபெறுகிறது. இந்தி ஹீரோக்கள், ஹிர்த்திக் ரோஷன், வருண் தவான், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா ஆகியோர் நடனம் ஆடுகின்றனர்.

பரிசுத் தொகை

இந்த ஆண்டுக்குரிய ஐ.பி.எல். பரிசுத்தொகை விவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படவில்லை. கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணிக்கு ரூ.15 கோடியும், 2-வது இடத்தை பிடித்த அணிக்கு ரூ.10 கோடியும் வழங்கப்பட்டது. இந்த முறை அதை விட அதிகமாக வழங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com