Published : 07,Apr 2018 02:01 AM
வராத ஆம்புலன்ஸ்... ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்த தாய்... தோளில் சிலிண்டருடன் மகன்..

உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனை வளாகத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டரை தோளில் சுமந்தபடி தாயும் மகனும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக காத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா மருத்துவக் கல்லூரியில் ஒரு மனிதன் நீண்ட நேரமாக ஆக்ஸிஜன் சிலிண்டரை தோளில் சுமந்த படி நீண்ட நேரமாக காத்திருத்தார்.அவரது அருகில் வயது மூத்த பெண்மணி ஒருவர் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்தபடி நின்றிருந்தார். நீண்ட நேரமாக மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தவர்களிடம் விசாரித்ததில், மருத்துவமனைக்கு தனது தாய்க்கு சிகிச்சைக்காக வந்ததாகவும் நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் வாகனத்துக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மருத்துவமனையில் பணிபுரியும் வார்டு பாய் அவர்களை காத்திருக்க சொன்னதாக தெரிகிறது.இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்த போது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
வடமாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது ஒன்றும் புதிதல்ல.ஆம்புலன்ஸ் இல்லாததால் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களை இருசக்கர வாகனங்களின் மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.இது தொடர்கதையாகி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் உரிய விசாரனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பதில் வருகிறதே தவிர இந்தப்பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுவதில்லை. இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் தாயும் மகனும் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக காத்திருந்தது காண்போரை வருத்தமடைய செய்தது.