[X] Close

அடுத்து தெலுங்கு பக்கம் தாவுகிறாரா அட்லி?

Confirmed--Atlee--to-direct-a-Tamil-film-before-Telugu-debut

இயக்குநர் அட்லி தெலுங்கு பக்கம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘மெர்சல்’. விஜய்யை வைத்து அட்லி இயக்கி இருந்த இந்தத் திரைப்படம் வரலாறு காணாத அளவிற்கு சர்ச்சையில் சிக்கியது. அந்தச் சர்ச்சையே படத்தை உலக அளவில் வெற்றிப் பெறவும் வைத்தது. அடுத்தடுத்து விஜய்யை இயக்கி அட்லி மீண்டும் விஜய்யை இயக்குவார் என்றே கூறப்பட்டது. ஆனால் அவர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அடுத்து விஜய் நடிக்க இருக்கும் படத்திலும் அட்லியின் பெயர் அடிப்படவில்லை. ஆகவே அவர் தெலுங்கில் அறிமுகமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 

ஒரு பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அட்லியிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு அவர் அரசல்புரசலாக பதிலளித்தார். மீண்டும் யாரை இயக்க இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் தெலுங்கில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறியதாக தெரிகிறது. அந்த நடிகர் பெரிய நடிகராக இருப்பார் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். அந்தக் கதாநாயன் பிரபாஸ் என பேச்சு அடிப்படுகிறது. மேலும் இந்தப் படம் இருமொழிகளிலும் வெளியாகுமா என இயக்குநர் வட்டாரத்திடம் விசாரித்த போது “நாயகன் விரும்பினால் இரண்டு மொழிகளில் எடுப்பதில் பிரச்னை இல்லை” என்று சொல்கிறார்கள். ஆக, முதன்முறையாக அட்லி தெலுங்கில் அறிமுகம் ஆவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கலாம். அதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close