Published : 06,Apr 2018 10:31 AM

மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறை

Police-arrested-the-students

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து போரட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டமாக கைதி செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தஞ்சையில் ஆற்றுப்பாலம் அருகே கல்‌லணை கால்வாயில் டெல்டா மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்பு சார்பில் ‌200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்‌தில் ஈடுபட்டனர். ‌காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என  போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர். மேலும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் திட்டங்‌ளை நிறுத்த வேண்டும் எனவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி‌ முழக்கங்களை எழுப்பினர். அறவழியில் போராடுவதால், அரசு தங்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.   போரட்டம் நடத்தி கொண்டு இருக்கும் போது அங்கு வந்த காவல்துறையினர் கல்லணை கால்வாயில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனக்கூறி காவல்துறையினர் மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்