Published : 05,Apr 2018 07:39 AM
வேலூரில் 15 பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

வேலூரில் கடைகள் அடைக்கப்பட்டு, திமுகவினர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுவரை 15 பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், விரைந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் தி.மு.க உள்ளிட்ட அதன் தோழமை கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தி.முகவினர் வேலூரில் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தி.மு.கவின் 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலயாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இதுவரை 15 பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டதையடுத்து வேலூர் மாநகரில் அரசு மற்றும் தனியார் பேருந்து இயக்கம் வெகுவாக குறைக்கப்பட்டு தற்போது பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் அணைகட்டு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மறியலில் பங்கேற்றுள்ளனர்.பேருந்துகள் உடைக்கப்பட்டு நிறுத்தப்பட்டு வருவதால் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.