[X] Close

கேன்சரை கொடுத்துவிட்டு போவதற்கு பெயர் ஸ்டெர்லைட்டா?: பொங்கிய நடிகர்

Actor-sathish-who-tweeted-against-sterlite

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக ட்விட்டரில் பொங்கி இருக்கிறார் இளம் நடிகர் ஒருவர்.

தமிழகம் இல்லாமல் உலக அளவில் பல நாடுகளில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. அரசியல் கட்சிகளை தவிர்த்து இப்போராட்டம் மக்கள் எழுச்சியாக மாறியுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுரம் கிராம மக்களின் போராட்டம் 50 நாட்ளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. 

அந்த ஆலைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடிகர் விவேக், ஆரி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கருத்திட்டு வருகிறார்கள். இந்நிலையில் திரையில் காமெடி நடிகராக வலம் வரும் சதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமாகவே பேசியிருக்கிறார். அவர், “லண்டன்ல இருக்கும் ஒரு பிசினஸ்மேன், ஆஸ்திரேலியாவுல இருந்து தாதுப்பொருளைத் தூத்துக்குடிக்கு எடுத்துவந்து, அதை சுத்த தாமிரமா மாத்தி, கவர்மெண்டுக்கு காசும், எங்களுக்கு கேன்சரும் கொடுத்துட்டுப் போறதுக்குப் பெயர்தான் ஸ்டெர்லைட். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இருக்கிற பிரச்சினை அல்ல. இந்தியாவுக்கே அவமானம். எங்கள் நாடு என்ன குப்பைத் தொட்டியா?” என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் சதீஷ்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close