Published : 04,Apr 2018 03:18 AM
யுடியூப் தலைமை அலுவலகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு

யுடியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் சான் ப்ரூனோ என்ற இடத்தில் யுடியூப் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு வந்த பெண் ஒருவர் திடீரென துப்பாக்சிச் சூடு நடத்தினார். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து 3 பேரும் சான் ப்ரூனோவில் உள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 36 வயதான ஆண் ஒருவரும், 32 வயதான பெண் ஒருவரும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பெண்ணின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் தன்னைத் தானே சுட்டுக்கொண்டும் தற்கொலை செய்துக்கொண்டார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான சான் ப்ரூனோ காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் எந்த உள்நோக்கமும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.