Published : 11,Mar 2017 06:58 AM
பாலியல் வழக்கில் சிக்கிய காயத்ரி பிரஜாபதி முன்னணி

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த காயத்ரி பிரஜாபதி, அமேதி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார்.
உத்தரபிரதேச மாநில அமைச்சராகப் பதவி வகித்தவர் காயத்ரி பிரஜாபதி. இவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்றும், அந்தப் பெண்ணின் மகளிடம் அத்துமீறி நடந்தார் என்றும் அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு வழக்கிலும் அவர் சம்மந்தப்பட்டுள்ளார். தேடப்பட்டு வரும் குற்றவாளியான, காயத்ரி பிரஜாபதி அமேதி தொகுதியில் போட்டியிட்டார். அவர் இப்போது முன்னிலை வகிக்கிறார்.