Published : 03,Apr 2018 07:35 AM

காவிரிக்காக போராட்டத்தில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் கைது

Two-college-students-arrested-in-coimbatore

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்தும் மத்திய அரசு இன்னும் அமைக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் என பலரும் போராடி வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆளும் அதிமுக அரசும் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கோவை வ.உ.சி பூங்காவில் இரண்டு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை போலீசார் கைது செய்துவிட்டனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்