Published : 02,Apr 2018 03:16 PM

ட்விட்டரில் யார் பெஸ்ட்? யார் ஒஸ்ட்? : திரைக்குப் பின்னால் திரைநட்சத்திரங்கள்

Who-s-Best-on-Twitter--Behind-the-scenes-screenshots

ஊடகத்தின் எல்லைகள் விரிவடைந்து வருகிறது. மிக மிக்கியமான ஊடகமாக ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மாறியுள்ளன. தனி மனித குரல்களுக்கு இனி யாருமே தடைப்போட முடியாது. அவர்கள் என்ன சொல்ல வேண்டுமோ அதை தைரியமாக, வெளிப்படையாக சொல்லலாம். உண்மையில் இதுவே ஜனநாயகம். அப்படி ஜனநாயகத்தின் அடையாளமாக இயக்கும் ட்விட்டரில் யார்? எப்படி செயல்படுகிறார்கள்? ஆக்டிவ் யார்? இன் ஆக்டிவ் யார்? செலிபிரைட்டி யார்? செயல்படாதவர் யார்? 

ரஜினி-கமல்

       

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி தன்னுடைய ட்விட்டர் கணக்கை  பிப்ரவரி 2013 தொடங்கினார். தொடங்கிய ஒரு சில நாட்களியே பல லட்சம் பேர் வேகமாக அவரை பின் தொடர ஆரம்பித்தனர். ஆயினும் தன்னுடைய அரசியல் அறிவிப்புக்கு முன்பு வரை தன்னுடைய ட்விட்டர் கணக்கை சினிமா தவிர மற்ற தகவல்களுக்கு அவர் அதிகம் பயன்படுத்தவில்லை. ‘புதிய இந்தியா பிறந்துள்ளது’ போன்ற முத்துக்கள் எப்போதாவது வந்தன. இன்றைய தினத்தில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 4.61 மில்லியன். தமிழ் சினிமாவின் மற்றொரு உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் தமிழ்நாட்டில் ட்விட்டருக்கான புதிய இலக்கணத்தையே உருவாக்கினார். இவரும் அரசியல் அறிவிப்புக்கு முன்புவரை படம் பற்றி தகவல்களை மட்டுமே பகிர்ந்து வந்தார். பின் அரசியல் ஆசைக்கு பின் ட்விட்டரையே தன்னுடைய முதல் ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கினார். இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 4.64 மில்லியன். ரஜினி ட்விட்டர் கணக்கு ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் கழித்தே, இவர் டிசம்பர் 2015ல் தொடங்கினார்.

விஜய்

                                                     

மோஸ்ட்வாண்டெட் ஹீரோ. அதிகம் ரசிகர்களை வைத்திருக்கும் மாஸ் ஹீரோ. விஜய் பொருத்தவரை ட்விட்டரில் கணக்கு ஒப்புக்கு இருக்கிறது. அவர் அதை மெளனமாக கவனித்து வருகிறார். ஆக்டிவ் ஆக இல்லை. அதிகம் பேசாதவர் இதில் மட்டும் பேசிவிடப்போகிறாரா என்ன? எப்போதாவது சினிமா நியூஸ் போடுகிறார். பிப்ரவரி 2013 தொடங்கிய அவருடைய கணக்கில் 1.45 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.அது தவிர அவருடைய ரசிகர்களே விஜய் ஃபோன்ஸ் என்கிற பெயரில் பல்வேறு கணக்குகளை கையாண்டு வருகிறார்கள். 

சூர்யா-தனுஷ்-சிவகார்த்திகேயன்

                                                           

ஜூன் 2010 ஆம் ஆண்டு தன்னுடைய கணக்கை தொடங்கிய தனுஷை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 7.26 மில்லியன்.அதேபோல் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 4.82 மில்லியன். இவர் அக்டோபர் 2011 ஆம் ஆண்டு தொடங்கினார். மார்ச் 2015 ஆம் ஆண்டு தன்னுடைய கணக்கை தொடங்கிய சூரியாவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 4.28 மில்லியன்.

ஏ. ஆர். ரஹ்மான் 

தென் இந்தியாவிலே அதிக ரசிகர்கள் பின்தொடர்வது ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமானைதான். இவர் 19.7 மில்லியன் ரசிகர்களை தன்வசபடுத்தி உள்ள இவர், 2009 ஆண்டு பிப்ரவரியில் தன்னுடைய கணக்கை தொடங்கினார். அதேபோல் இளம் இசையமைபாளர் அனிருத் 6.21 மில்லியனை தொட்டு இருக்கிறார் 

சல்மான்-ஷாருக்

                             

இந்தியாவை பொறுத்தவரை பாலிவுட்டின் பாட்ஷா ஷாருகானை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை என்பது அமிதாப் பச்சனை விட அதிகம். ஜனவரி 2010 ஆம் ஆண்டு தன்னுடைய ட்விட்டர் கணக்கை தொடங்கிய ஷாருகானை பின் தொடர்பவர்கள் 34.5 மில்லியன். அமிதாப் பச்சனை பின் தொடர்பவர்கள் 33.8 மில்லியன். வசூல் சக்ரவர்த்தியான சல்மானை பின் தொடர்பவர்கள் 32.5 மில்லியன்.

அஜித்,விக்ரம்,விஜய்சேதுபதி போன்ற நட்சதிரங்கள் ட்விட்டர் பக்கத்தில் இல்லை.ஆனால் அவர்களுடைய ரசிகர்கள் இவர்களுடைய பெயரில் பல கணக்குகளை  உலாவ விட்டு இருக்கிறார்கள்.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்