Published : 02,Apr 2018 02:09 PM

அண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

Vigilance-Department-Inquiry-in-Anna-University

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேராசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால், அவற்றின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். கடந்த ‌2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் உள்ளிட்டோரை பணி நியமனம் செய்ய 20 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டதாக புகார்கள் எழுந்தன. 

அப்போது துணை வேந்தராக பணியாற்றிய ராஜாராம் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், ராஜாராம் வீடு, அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் தற்போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு சோதனை விசாரணை நடைபெறுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்