இரவு பணியின் போது காவலர் செய்ய கூடிய காரியமா இது... அதிர்ச்சி வீடியோ...

இரவு பணியின் போது காவலர் செய்ய கூடிய காரியமா இது... அதிர்ச்சி வீடியோ...
இரவு பணியின் போது காவலர் செய்ய கூடிய காரியமா இது... அதிர்ச்சி வீடியோ...

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், பணியின் போது பெண்காவலர் ஒருவர் மது அருந்திய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.

பழனியை அடுத்துள்ள சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பணி புரியும் ஜெய்னுப் நிஷா என்பவர். கடந்த 30ம் தேதி இரவு பணியின் போது காவலர் சீருடையில் தனது உறவினருடன் சேர்ந்து, காரில் அமர்ந்தவாறு மது அருந்தும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேலிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, பெண் காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

காருக்குள் அமர்ந்திருக்கும் அந்தப் பெண் காவலரை, டிரைவர் சீட்டில் இருக்கும் ஆண் நபர் ஒருவர் அவர் மது அருந்தும் காட்சியை வீடியோ எடுக்கிறார். அந்த பெண் காவலரை மதுவை எடுத்து காட்டும் படி அந்த ஆண் நபர் கூருகிறார். பின் அந்தப் பெண் காவலர் அவர் விடியோ எடுப்பதை தெரிந்து தன் முகத்தை மறைக்கிறார். அந்த ஆண் நபர் அப்பெண் காவலரை வீடியோ எடுத்துக்கொண்டே கண்முடித்தனமான போதையில் இருக்கிறார் என்று கூறுகிறார். அந்தப் பெண் காவலரும் விடியோ எடுப்பதை அறிந்தே அவர் மது அருந்துகிறார். 

இந்த விடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறாது. காவல் சீருடையில் இருக்கும் அந்த பெண் இப்படி ஒரு செயலில் ஈடுப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.  

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com