Published : 02,Apr 2018 05:27 AM

ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Bomb-threat-to-MK-Stalin-House

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்போவதாக சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து அந்த அழைப்பு எங்கிருந்து வந்தது என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அழைப்பு காஞ்சிபுரத்தில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்..? என்பதை கண்டறிய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து விடும் எனவும் தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் சிலர் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து காவல்துறையினர் அங்கு குவிந்து, வெடிகுண்டு பரிசோதனையாளர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் நாராயணசாமி வீடு முழுவதும் வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. சோதனை முடிவில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், அந்த மிரட்டல் புரளி என்பதும் தெரியவந்தது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்