சிஎஸ்கே போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை: இன்று தொடக்கம்

சிஎஸ்கே போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை: இன்று தொடக்கம்
சிஎஸ்கே போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை: இன்று தொடக்கம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.

பதினோறாவது ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் போட்டி வரும் 7ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது. மும்பையில் நடைபெறும் இதன் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே), சென்னை சேப்பாக்கத்தில் 7 லீக் போட்டிகளில் பங்கேற்கிறது. சிஎஸ்கே, சென்னையில் ஆடும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. இந்தப் போட்டி சேப்பாக்கத்தில் வரும் 10 ஆம் தேதி நடக்கிறது.

 இந் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் மோதும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங் குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் காலை 9.30 மணியில் இருந்து நண்பகல் 12.30 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணியில் இருந்து 6 மணி வரையிலும் டிக்கெட்டுகளைப் பெறலாம். ஒருவருக்கு 2 டிக் கெட் தான். குறைந்த பட்ச கட்டணம் ரூ.1,300. மற்றும் ரூ.6,500, ரூ.5,000, ரூ.4,500, ரூ.2,500, ரூ.1,500 ஆகிய கட்டணங்களி லும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. www.chennaisuperkings.com, www.bookmyshow.com ஆகிய இணையதளங்களிலும் டிக்கெட்டை பதிவு செய்துகொள்ளலாம்.

2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சென்னை அணி, ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் காரணமாக சென்னை அணி பயிற்சியில் ஈடுபட்டபோது ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com