[X] Close

குவைத்தில் பயங்கர விபத்து: இந்தியர்கள் உட்பட 15 பேர் பலி!

15-killed-in-Kuwait-in-accident-involing-2-buses

குவைத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இந்தியர்கள் உள்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழ‌ந்தனர்.

குவைத் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்கள், அந்நிறுவன பேருந்தில் சென்றபோது, பர்கன் எண்ணெய் வயல் அருகே எதிரே வந்த பேருந்து மீது பயங்கரமாக மோதியது.


Advertisement

இதில் பேருந்துகள் அப்பளம் போல் நொறுங்கியதில், அதில் பயணித்த 7 இந்தியர்கள், 5 எகிப்தியர்கள், 3 பாகிஸ்தானியர்கள் என மொத்தம் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 4 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close