Published : 01,Apr 2018 07:14 AM
ஸ்டெர்லைட் போராட்டம் : மய்யத்தை துறந்த கமல்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமரரெட்டியார்புரம் மக்கள் 48 வது நாளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு நபர்கள் , அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இன்று போரட்டக் களத்துக்கு வந்து மக்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பணத்துக்காகவே மக்கள் போராடி வருவதாக தன்னிடம் பலர் தெரிவித்ததாகவும் , ஆளுக்கு 5 கோடி கேட்பதாகவும் ஆலை தரப்புக்கு தொடர்பான நபர்கள் கூறியதாக தெரிவித்தார். ஆனால் மக்களுடைய போராட்டம் அப்படிப்பட்டதல்ல என்பதால் ஆதரவு தெரிவிக்க வந்தேன் எனவும் கூறினார்.
மேலும், மக்களுக்காக மய்யத்தை விட்டு விலகி ஒரு பக்கமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அனைத்திலும் மய்யத்திலே இருக்க முடியாது என்பதால் இப்போது மக்கள் பக்கம் சேர்ந்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.