Published : 31,Mar 2018 02:37 PM

பச்சை புள்ள போல் அழுத வார்னர் - போலி கண்ணீர் என ரசிகர்கள் கிண்டல்

Ball-Tampering-Row-David-Warner-Tearful-Apology-Fails-To-Win-Over-Fans-On-Twitter

ஆஸ்திரேலிய அணிக்காக இனிமேல் விளையாட வாய்ப்புள்ளதாக என்பது தெரியவில்லை என்று டேவிட் வார்னர் கூறியுள்ளார். 

ஆஸ்திரேலிய வீரர் திட்டமிட்டு பந்தை சேதப்படுத்திய சம்பவம் கிரிக்கெட் உலகையே அதிரச் செய்தது. இந்தச் சம்பவத்தில் கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தையும், துணை கேப்டன் பதவியில் இருந்து வார்னரையும் நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. பின்னர் அவர்களுக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. கிரிக்கெட் உலகமே இந்தச் சம்பவம் குறித்துதான் பேசிக்கொண்டிருக்கிறது. ஸ்மித் தனது பேட்டியில் தேம்பி, தேம்பி அழுதது எல்லோரையும் களங்க வைத்துவிட்டது. 

ஸ்மித்தை தொடர்ந்து தற்போது வார்னரும் கண்ணீர் சொட்டச் சொட்ட பேட்டி அளித்துள்ளார். எல்லா தரப்பினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அவர், ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடுவனேனா இல்லையா என்பது தெரியவில்லை என்று கூறினார். ஆனால், வார்னர் அழுததை பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்மித் அழுததை பார்த்ததும் பலரும் கண்கலங்கிவிட்டார்கள். ஸ்மித்திற்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மனதில் இருந்து சொல்லப்பட்டதாகவே ரசிகர்கள் கருதினர். 

வார்னர் அழுத போது அதற்கு எதிர்வினை முற்றிலும் வேறாக இருக்கிறது. இதுஒரு போலியான கண்ணீர் என அவர்கள் விமர்சித்து தள்ளிவிட்டார்கள். இதுஒரு சிறந்த தொலைக்காட்சி நடிப்பு என்றும் பலர் கிண்டல் அடித்துள்ளனர். 

          

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்