[X] Close

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக அழுக்கு நீரை குடித்த சரத்குமார்

Actor-sarathkumar-support-sterlite-protest

நடிகரும் சமகவின் தலைவருமான சரத்குமார் இன்று ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.  


Advertisement

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், ஆலை விரிவாக்கத்தை தடை செய்ய கோரியும் பலரும் பல வழிகளில் போராடி வருகின்றனர். மேலும் இந்த ஆலையின் விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும், மண்ணுக்கும், மக்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் தொடர்ந்து ஆபத்து நீடிக்குமேயானால், அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதுதவிர வைகோ, தொல்.திருமாவளவன், வைகோ உள்ளிட்ட பல தலைவர்களும் தங்களது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ஸ்டெர்லைட் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சரத்குமார் கலந்து கொண்டார். அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “48 வது நாளாக நடைபெறும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பிற்கான போராட்டத்தில் இன்று கலந்து கொண்டு எனது ஆதரவை தெரிவித்தேன். மேலும் போராட்டக்களத்தில் குமரெட்டியாபுரம் மக்கள் பயன்படுத்தும் மாசு கலந்த நீரை அருந்தி எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குடித்த மாசு நீர் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close