[X] Close

தவான் பந்துவீச்சை அடித்து நொறுக்கும் மனைவி

Indian-Cricketer-Dhawan-playing-Cricket-with-his-Family

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன் தனது குடும்பத்தினருடன்  நேரத்தை செலவழித்து வருகிறார். மெல்போர்ன் நகரில் உள்ள கடற்கரையில் தவான் தனது குடும்பத்தினருடன் கிரிக்கெட் விளையாடும் காட்சியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் தவான் பந்துவீச, அவரது மனைவி பேட்டிங் செய்கிறார். அவர் அடிக்கும் பந்தை அவர்களது குழந்தைகள் ஃபீல்டிங் செய்கின்றனர். இந்த ட்விட்டர் பதிவில் மைதானத்திற்குள் நான் பேட்ஸ்மேன். மைதானத்துக்கு வெளியே பந்துவீச்சாளர். குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது மகிழ்ச்சியானது என கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close