[X] Close

சிறைக்கு திரும்பும் சசிகலா

sasikala-return-to-jail-before-parole-date

உடல் நலக்குறைவால் உயிரிழந்த புதிய பார்வை இதழின் ஆசிரியர் நடராஜன் மறைவையடுத்து பரோலில் வந்த சசிகலா இன்று மீண்டும் சிறைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்.


Advertisement

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா கடந்த 20ம் தேதி பரோலில் வெளியேவந்தார். ‌அவரது கணவர் மறைவையடுத்து தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து துக்கம் விசாரித்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் அருளானந்தம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 7.30 மணியளவில் முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு, சசிகலாவை நேரில் சந்தித்தார். சுமார் அரை மணிநேரம் இந்த சந்திப்பு நடைபெற்ற நிலையில், நடராஜனின் மறைவு குறித்து கேட்டு துக்கம் விசாரித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து 8.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து சசிகலா மீண்டும் சிறைக்கு புறப்பட்டார். கார் மூலம் சாலை மார்க்கமாக புறப்பட்டு சென்றார். இன்று மாலை 5 மணியளவில் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையை சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close