Published : 31,Mar 2018 07:48 AM

மத்திய அரசு மீது தமிழக அரசு வழக்கு

TN-Govt-filed-a-case-in-central-government

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 6 வாரங்களுக்குள் மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவை அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது கால நீட்டிப்பிற்கு அனுமதியில்லை என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

6 வாரத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், 3 வாரங்களுக்குப் பிறகே இதுதொடர்பாக மாநில பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை மத்திய அரசு கூட்டியதாக தெரிவித்துள்ளது. ஆனால், தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கை அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. வரும் ஜூன் ஒன்றாம் தேதி சாகுபடி தொடங்கவுள்ளதால் மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவை அமைக்க வலியுறுத்தி மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு மார்ச் மாதம் மட்டும் 3 முறை தமிழக அரசு கடிதம் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. உரிய நேரத்தில் நீர் திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால், மேலாண்மை வாரியம் அமைக்கும் கால தாமதமான நடவடிக்கை தமிழக விவசாயிகளுக்கு அநீதி இழைக்கும் செயல் என்று கூறியுள்ளது. தீர்ப்பின் படி உரிய நடவடிக்கை எடுக்காமல் வேண்டுமென்றே உச்சநீதிமன்றத்திற்கு கீழ்ப்படியாமல் மத்திய அரசு செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது. ஆகையால், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்கி இந்த விவகாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்