லாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பு: அதிரடியில் இறங்கிய காவல்துறை

லாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பு: அதிரடியில் இறங்கிய காவல்துறை
லாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பு: அதிரடியில் இறங்கிய காவல்துறை

சென்னையில் டேங்கர் லாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை தண்டையார்பேட்டை, ஐ.ஓ.சி உள்ளிட்ட பகுதியில் டேங்கர் லாரி உரிமையாளர்களிடம், அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் ஷசாங்சாய், மாதவரம் துணை ஆணையர் கலைச்செல்வன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையர்கள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஆயில் பாலாஜி என்பவரின் தலைமையில் தான் கொள்ளை கும்பல் செயல்பட்டு வருவதாக கண்டறியப்பட்டது.மேலும் இந்தக்கும்பல் ஊட்டியில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது. தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் காவல் ஆய்வாளர் ஜவஹர் தலைமையில் ஊட்டிக்கு விரைந்த தனிப்படையினர், அங்கு பதுங்கியிருந்த கொள்ளையர்களை 8 பேரையும் துப்பாக்கி முனையில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.


கைது செய்யப்பட்டவர்கள் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான, இம்ரான், இப்ராஹிம், கரிமுல்லா, கமலாராஜன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கி, 3 ரவுண்ட் தோட்டாக்கள், 7 கத்திகள், 29 கைப்பேசிகள், 5 லட்சம் ரூபாய் பணம், 2 சொகுசு கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வழக்கறிஞர், வருமானவரித்துறை மற்றும் பத்திரிகைகளின் போலி அடையாள அட்டைகளையும் அவர்களிடம் இருந்து காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி ரியாஜ் கானை போலீஸார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com