[X] Close

ஸ்டெர்லைட் ஆலை மூடல் !

Strelite-industries-shutdown-for-maintenance-from-today-onwards

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதனிடையே வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க முயற்சியில் ஈடுபட்டது. இதற்கான அனுமதி கிடைக்கப்பட்டுள்ள நிலையில்  பணிகளையும் மேற்கொண்டது. எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த மக்கள், ஆலையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் உயிர்வாழ தகுதியற்ற நிலை ஏற்படும் என்பதை வலியுறுத்தி கடந்த 46 வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.


Advertisement

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கை ஒன்று மட்டுமே. ‘எங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்’ என்பது மட்டுமே. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் அறவே இல்லாமல் சென்றுவிடும். விவசாயம் பொய்த்துவிடும். எங்களுக்கு ஸ்டெலைட் ஆலை வேண்டவே வேண்டாம் என கடுமையான முழுக்கங்களை எழுப்பி இவர் தான் தலைமை என்றில்லாமல் அரசியல் பின்புலம்  இல்லாமலும் ஒட்டுமொத்த மக்களின் முயற்சியாக 46 வது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நேரில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தங்களை வருத்திக்கொள்ளும் விதமான போராட்டங்களையும்  நடத்தினர். இந்நிலையில் இன்று முதல் ஸ்டெர்லைட் ஆலை ஆண்டு பராமரிப்புக்காக 15 நாள் மூடப்படவுள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close