Published : 29,Mar 2018 10:33 AM

படிப்புக்கும், விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்குங்கள்: சச்சின்

Sachin-said-Assign-time-to-study-and-sports

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினராக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். பள்ளிகளுக்கு மற்றும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சுமார் 7.4 கோடி ரூபாயை சச்சின் தனது பாராளுமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளார். 

நேற்றைய தினம் மும்பை சியூரி பகுதியில் முதன் முதலாக நிதியுதவி அளித்த குரு கோவிந்த் டி பள்ளியை சச்சின் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அங்குள்ள பள்ளி குழந்தைகள் இடம் பேசிய சச்சின் "நன்றாக படியுங்கள், அதே நேரம் விளையாடவும் நேரம் ஒதுக்குங்கள்" என்றார். மேலும் மஹாராஷ்டிரா பகுதியில் இயங்கி வரும் காவல்துறை பயிற்சி முகாமிற்கு கட்டமைப்பு, குடிநீர் வசதி ஆகியவற்றை மேன்படுத்த 15 லட்ச ரூபாய் நீதி ஒதுக்கியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் சமூக வளர்ச்சியில் தனது பங்களிப்பை அளித்து வருவது ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்