[X] Close

7 விநாடிகளில் 43 கோடி கொள்ளை

Thief-steals-diamond-worth-HK-5-million-from-jewellery-shop-in-Hong-Kong

ஹாங்காங் நகைக்கடை ஒன்றில் சுமார் 43 கோடி ரூபாய் மதிப்பிலான வைர ‌மோதிரம் ஏழு விநாடிகளில் திருடப்பட்டுள்ளது.

சிம் ஷா சூய் என்ற இடத்தில் நடந்த இந்த திருட்டு, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. முகமூடி அணிந்த நபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள தங்க நகைக் கடையில் உள்ள கண்ணாடியை கோடாரியால் உடைத்து இந்த துணீகர சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார். அவர் திருடியது 43 கோடி மதிப்பிலான வைர மோதிரம் எனத் தெரி‌வந்துள்ளது. கடை வாயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளையடித்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அதிக பாதுகாப்பான நகரம் என்று கருதப்படும் ஹாங்காங்கில் நடந்த இந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது


Advertisement

Advertisement

Advertisement
[X] Close