[X] Close

டொனால்ட் ட்ரம்பின் நிர்வாண சிலை ஏலம்!

Naked-statue-auction-for-Donald-Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாண சிலை ஏலம் விடப்படவுள்ளது. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பையயும் சர்ச்சையையும் பிரித்து பார்க்க முடியாது. அதிபர் ஆவதற்கு முன்பும் சரி, அதிபர் ஆன பிறக்கும் சரி சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. சமீபத்தில் கூட பாலியல் நடிகையுடன் தொடர்பில் இருந்தாக ஒரு சர்ச்சை பூதாகரமானது. தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை.  வெண்ட் கோஸ்ட் பகுதியைச் சேர்ந்த சிற்பி ஒருவரால் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாண சிலை ஏலம் விடப்படவுள்ளது.  
  
வெண்ட் கோஸ்ட் பகுதியைச் சேர்ந்த சிற்பி ஒருவரால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலை ட்ரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு முன் வடிவமைக்கப்பட்டது. அதிபரான பின் சிலையை அழிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சிலையை ஏலத்தில் விட ஜூலியன் என்ற ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது. வருகிற 2ஆம் தேதி நியூஜெர்சியில் சிலை ஏலம் விடப்படுகிறது. இந்தச் சிலை 13 லட்சம் முதல் 22 லட்சம் வரை ஏலத்துக்கு போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close