நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
பிரசாந்தின் முன்னாள் மனைவியான கிரகலட்சுமி, இவருக்கும் பிரசாந்திற்கும் விவாகரத்து ஆகிவிட்ட நிலையில் சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் சகோதரர் நாகராஜ் உடன் வசித்து வருகிறார். நேற்றிரவு இவர் குடும்பத்தோடு கீழ் தளத்தில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க கதவு வழியாக முதல் தளத்திற்குச் சென்று, பிரேவில் இருந்த 170 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
காலையில் எழுந்த நாகராஜ் பின் பக்கக் கதவு உடைந்து கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து மாம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த அறை கிரகலட்சுமியின் அறை என்றும் தற்போது கிரகலட்சுமி அடையாறில் தங்கி உள்ளதாகவும் இங்கு வரும் போது கொள்ளை நடந்த அறையில்தான் அவர் தங்குவது வழக்கம் என்று போலீசார் தெரிவித்தனர். பின் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்