[X] Close

‘போலீஸையே விரட்டி வெட்டுறீங்களா?’ ஒரு உண்மைச் சம்பவத்தின் பின்னணி!

Chennai-Police-heavy-attack-on-3-Rowdies-for-their-Knife-cut-a-Police

பூந்தமல்லி அருகே போலீஸை இரக்கமின்றி கத்தியால் வெட்டிய ரவுடிகளின் கை, கால்களை போலீஸார் உடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை பூந்தமல்லியில் அருகே காவலர் அன்பழகன் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் ஹோம்கார்ட் குழுவைச் சேர்ந்த சரவணன் என்பவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். காட்டுப்பாக்கம் அருகே சென்றபோது, அங்கு சந்தேகத்திற்கு உரிய வகையில் 3 பேர் நின்றுள்ளனர். அவர்கள் போலீஸை பார்த்தவுடன், பைக்கில் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதைக்கண்ட காவலர் அன்பழகன் உடனே, அந்த மூன்று பேரையும் தடுத்துள்ளார். அவர்களிடம் யார் நீங்கள்? இந்நேரத்தில் என்ன செய்கிறீர்கள்? என கேள்விகளை எழுப்பியுள்ளார். அதற்கு முன்னுக்கு பின் முரணான பதில்களை மூன்று பேரும் கூறியுள்ளனர். 


Advertisement

இதையடுத்து தனது செல்போனில் இருந்த குற்றவாளிகளை கண்டறியும் அப் மூலம் அந்த மூன்று பேரையும், காவலர் அன்பழகன் புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் தனது செல்போனில் பேஜ் டிரக்கிங் ஆப் செயலி மூலம் அந்த மூன்று பேர் பேரில் இரண்டு பேர் முகத்தை போட்டோ எடுத்துள்ளார். அதில் மூன்று பேரும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கிடுக்குப்பிடி கேள்விகளை காவலர் கேட்கத்தொடங்கியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ரவுடிகள், தாங்கள் வைத்திருந்த பெரிய கத்தியால் அன்பழகன் கையில் ஓங்கியபடியே வெட்டத்தொடங்கினர். இதில் அவரது கை பிளந்துபோனது. இருப்பினும் ஒரு ரவுடியை எதிர்த்து தள்ளினார் அன்பழகன். அப்போது உடனிருந்த மற்றொரு ரவுடி அன்பழகன் இடுப்பின் குத்தினார், இதில் நிலை குலைந்த அன்பழகன் அங்கிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினார். இருப்பினும் அவரை விரட்டிச் சென்று ரவுடிகள் வெட்டினர். அதிர்ஷ்டவசமாக காவலர் உயிர் தப்பினர்.

பின்னர் காவலரின் போனை எடுத்துக்கொண்டு 3 ரவுடிகளும் பைக்கில் தப்பிச்சென்றனர். காயங்களுடன் பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு விரைந்த அன்பழகன், நடந்த சம்பவத்தை சக போலீஸாருடன் பகிர்ந்தார். அவர்கள் அன்பழகனுக்கு முதலுதவி அளித்து, அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள், அங்கிருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியிருந்த காட்சிகள் பார்வையிட்டனர். அதில் அன்பழகன் தாக்கப்பட்ட வீடியோ பதிவாகியிருப்பதையும், மூன்று ரவுடிகளையும் அடையாளம் கண்டனர்.

அந்த 3 ரவுடிகளையும் உடனே படம் பிடித்து இணை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பினர். அதில் இரண்டு பேரை அடையாளம் காணப்பட்டு, அவர்களின் தகவல்கள் சென்னையில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கு பகிரப்பட்டது. மேலும் ரவுடிகள் எடுத்துச்சென்ற காவலர் அன்பழகன் செல்போனில், ஜிபிஎஸ் வசதி இருந்ததால் அதன்மூலமும் ரவுடிகளின் இருப்பிடம் தேடப்பட்டது. தேடலில் ஜிபிஎஸ் கருவி திருவேற்காடு அருகே உள்ள அய்யப்பாக்கத்தை காட்ட, உடனடியாக அங்கு காவல்படை விரைந்தது. அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் பதுங்கியிருந்த 3 ரவுடிகளையும், மடக்கிப்பிடித்தனர் காவல்துறையினர்.

அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், ஒருவர் மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (25), திருவேற்காட்டை சேர்ந்த சதிஷ்குமார் (26), அவரது தம்பி ரஞ்சித் (21) என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் 3 பேர் மீது வழிப்பறி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. பின்னர் அவர்களிடம் தங்கள் பாணியில் விசாரணையை மேற்கொண்ட போலீஸார், “போலீஸையே விரட்டி வெட்டுறீங்களா’ என்று கேள்வி எழுப்பிவாரே தண்டித்துள்ளனர். இதில் ஒருவருக்கு கை மற்றும் மற்றொருவருக்கு கை, கால் உடைந்துள்ளது. ஆனால் போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலிலோ, அவர்கள் மூன்று பேரும் பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டதாக கூறியுள்ளனர். அத்துடன் மூன்று பேருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே காவலர் வெட்டப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதைக்கண்ட பலரும் இந்த ரவுடிகளை விடாதீர்கள், இவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று ஆத்திரத்துடன் தங்கள் பதிவுகளை பதிவிட்டிருந்தனர். அந்தப் பதிவுகளின் பகிர்வுகள் முடிவதற்குள், ரவுடிகளின் கை, கால்கள் உடைக்கப்பட்ட புகைப்படங்களை காவல்துறையினர் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். இதையடுத்து விமர்சனங்கள் கிளம்ப ரவுடிகளின் புகைப்படங்கள் நீக்கப்பட்டது. தற்போது தாக்கப்பட்ட காவலர் அன்பழகன் உயிருக்கு அபாயம் இல்லை என்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சென்னை இணை ஆணையம் ப்ரேம் சின்கா நேரில் சென்று பார்வையிட்டார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close