Published : 28,Mar 2018 09:59 AM

தந்தை இறந்த சோகத்தோடு கண்ணீருடன் தேர்வெழுதிய மாணவி!

Vellore-10th-Std-Student-written-exam-between-her-Father-Death

ஆம்பூர் அருகே தந்தை இறந்த நிலையில், மகள் 10ஆம் வகுப்பு தேர்வை எழுதிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில் கீழ்மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த செல்வம், பாந்தாரப்பள்ளியைச் சேர்ந்த கோதண்டன், பன்னீர்குட்டையைச் சேர்ந்த ரங்கநாதன் ஆகிய 3 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் மூவரும் கம்பெனியின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி நேற்று உயிரிழந்தனர்.


இதில் ரங்கநாதன் என்பவருக்கு ஸ்வேதா என்ற மகள் உள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் ஸ்வேதா, தனது தந்தையின் மரணத்தால் மிகவும் மனக்கவலை அடைந்துள்ளார். தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. தந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்த நிலையில், கனத்த இதயத்துடனும், கண்ணீருடனும் ஸ்வேதா பத்தாம் வகுப்பு தேர்வை இன்று எழுதினார். துக்கத்திலும் தளர்ந்து போகாமல் மன உறுதியுடன் தேர்வெழுதிய அந்த மாணவிக்கு வாழ்த்துகள் குவிந்துள்ளன. இருப்பினும் இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்