Published : 28,Mar 2018 07:04 AM
செத்துப்போனதா மனித நேயம்? காயமடைந்த மூதாட்டியைக் கண்டுகொள்ளாத மக்கள்

கேரளாவில் சாலைவிபத்தில் சிக்கிய மூதாட்டியை பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் சென்றது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கடக்காவூரில் விபத்து ஏற்பட்டு சாலையில் விழுந்த கிடந்த மூதாட்டியை எவரும் கண்டுகொள்ளாமல் அவ்வழியே கடந்து சென்ற சம்பவம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இடித்து தள்ளினர். சாலையில் விழுந்து கிடந்த அவரை, அந்த வழியே சென்ற எவரும் நின்று கூட பார்க்கவில்லை. பல வாகனங்கள் அந்த வழியாக சென்றாலும் கூட யாரும் அந்த மூதாட்டிக்கு உதவ முன்வரவில்லை. அதன் பின்னர் காவல்துறை வாகனத்தில் அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். விபத்து ஏற்படுத்தியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.