உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனையில் உயிரிழந்த தந்தையின் உடலை 8கி.மீ தூரம் ரிக்ஷாவில் குழந்தைகள் இழுத்துச் சென்ற அவலம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பாராபங்கி பகுதியை சேர்ந்தவர் மன்ஷரம். இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலத்தை கொண்டு செல்ல வேன் வசதி இல்லாததால் சைக்கிள் ரிக்ஷாவில் கொண்டு சென்றனர் அவர்களது பிள்ளைகள்.
மாற்றுத்திறனாளியான மகன் மற்றும் சிறுவயது மகள் தந்தையின் சடலத்தை சுமார் 8 கி.மீ தூரம் சைக்கிள் ரிக்ஷாவில் கொண்டு சென்றனர். வடஇந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. தங்கள் உயிருக்கு உயிரானவர்கள் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் போது அவர்களின் சடலத்தை வீட்டுக்கு கொண்டு செல்ல முடியாத அவலம் ஏற்படுகிறது. சிலர் தங்களது தோள்களில் சுமந்தபடி சடலத்தை தூக்கிச் சென்ற அவலம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!