Published : 27,Mar 2018 07:50 AM
ஒய்.எஸ்.ஆர். ரெட்டிக்கு மருமகளாகப் போகும் கீர்த்தி சுரேஷ்?

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ரெட்டியின் மருமகளாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார்.
பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ என்ற தலைப்பில் திரைப்படமாகி வருகிறது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ் ஆகிய இருமொழிகளில் எடுக்கப்பட்டு வந்த நிலையில் வரும் மே9 ஆம் தேதி இது திரைக்கு வர உள்ளது. இந்த ‘பியோபிக்’ படத்தில் நடித்ததன் மூலம் கீர்த்தி சுரேஷ் பெரிய எக்ஸ்பெக்ட் ஆகி இருக்கிறார். வாழ்க்கை வரலாறா? உடனே கீர்த்தியை புக் செய்யுங்கள் என சொல்லும் அளவுக்கு அவரது அடையாளம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ரெட்டி பற்றிய ஒரு ‘பயோபிக் ஃபிலிம்’ உருவாக உள்ளது. என்ன புரியவில்லையா? அதாங்க.. வாழ்க்கை வரலாற்று படம். இதற்கு ‘யாத்ரா’ என தலைப்பிட்டுள்ளனர். இந்தப் படத்தில் ஒய்.எஸ்.ஆர். ரெட்டியின் கதாப்பாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்க இருக்கிறார். அவர்து மனைவி கதாப்பாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தில் ஒய்.எஸ்.ஆர். ரெட்டியின் மருமகள் கதாப்பாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இது குறித்து இப்படத்தின் இயக்குநர் மஹி வி ராகவ் எந்தக் கருத்தையும் இன்னும் தெரிவிக்கவில்லை. மேலும் இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலகம் எங்கும் திரைக்கு வர உள்ளது.