Published : 10,Mar 2017 02:44 AM

சென்னையில் வீடு வாங்கினார் எமி ஜாக்சன்

Amy-Jackon-bought-New-Home-In-chennai

தமிழில், ’மதராசப்பட்டினம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன்.

பிரிட்டிஷ் மாடலான இவர், தொடர்ந்து தாண்டவம், தங்க மகன், தெறி, கெத்து உட்பட சில படங்களில் நடித்தார். இந்தியில் ஏக் தீவானா தா, சிங் இஸ் பிளிங் படத்தில் நடித்த அவர், இப்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும், 2.0 படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்திவரும் எமி ஜாக்சன், சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி வந்தார். இவர், இப்போது பெசன்ட் நகர் அருகே சொந்த வீடு வாங்கியுள்ளார். அந்த வீட்டில் தனது அம்மா மற்றும் செல்ல நாயுடன் குடியேறியிருக்கிறார் எமி ஜாக்சன்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்