Published : 26,Mar 2018 02:36 AM

கிணற்றில் ஆட்டோ விழுந்து10 பேர் பலி

Ten-killed-in-road-accident-in-Telangana

தெலங்கானாவில் கிணற்றுக்குள் ஆட்டோ விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நிசாமாபாத் மாவட்டத்தில் முப்கல் என்ற இடத்தில் இருந்து மென்டோரா என்ற பகுதி நோக்கி ஆட்டோ சென்றபோது கட்டுப் பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பய ணம் செய்த 14 பேரில், நான்கு பெண்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு நான்கு பேரை உயிருடன் காப்பாற்றினர். கட்டு ப்பாடு இல்லாத அதிவேகம் காரணமாகவே இந்த விபத்து நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆழ்ந்த இரங் கல் தெரிவித் துள்ளார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்