மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியர் கைது

மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியர் கைது
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியர் கைது

மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் இம்ரான் கான் என்பவர் கணக்குப்பதிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரியில் உள்ள நூலகத்தில் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினால் தன் சொல்படி நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆசியரின் தவறான அணுகுமுறையால் மாணவி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். வீட்டில்  உள்ளவர்களிடம் அவர் முன்பு போல் சகஜமாக நடத்துக்கொள்ளவில்லை. அந்த ஆசிரியரின் வகுப்புகளுக்கு விருப்பமே இல்லாமல் சென்றுள்ளார். இதனை கவனித்த அவரது பெற்றோர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். பெற்றோர்களிடம் அவர் நடத்தவற்றை கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், மார்ச் 8ஆம் தேதி புத்தகங்களை அடுக்கி வைப்பதற்காக கணக்குப்பதிவியல் ஆசியரான இம்ரான் கான் மாணவியை நூலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவியை தவறாக தொட முயற்சித்துள்ளார் மேலும் தன் சொல்படி கேட்டால் தேர்வில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என கூறியுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவியின் பெற்றோர் அந்த ஆசிரியரை கடுமையாக தாக்கியுள்ளனர். தற்போது இதுதொடர்பாக அந்தப்பெண்ணின் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தனர்.

கல்லூரி முதல்வர் கூறுகையில், இம்ரான் கான் எங்களது கல்லூரியில் 15 வருடங்களாக பணியாற்றி வருகிறார். அவர் மீது இதுவரை எந்தக்குற்றச்சாட்டும் வந்தது இல்லை. அவர் கல்லூரியை விட்டு வீட்டிற்கு செல்லும் போது கல்லூரி வளாகத்தில் வைத்து ஒரு கும்பல் கடுமையாக அவரை தாக்கியது. இதனையடுத்து நான் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தேன். எனக்கு இந்த விவகாரம் குறித்து தெரியாது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனக்கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com