[X] Close

சேலத்தில் விமான சேவை இன்று தொடக்கம்

Salem-flight-service-starts-today

சேலம் மாவட்டம் கமலாபுரம் விமான நிலையத்தில் இன்று முதல் விமான போக்குவரத்து சே‌வை தொடங்க உள்ளது.


Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து விமான போக்குவரத்து சேவை முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று நடக்கிறது. காலை 11 மணி அளவில் டெல்லியில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு காணொலி காட்சி மூலம் விமான சேவையை தொடங்கி வைக்கிறார். சேலத்தில் நடைபெறும் தொடக்க விழாவை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'ட்ரூ' ஜெட் நிறுவன இயக்குனர் பிரேம்குமார் பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். விமான சேவை தொடங்க உள்ளதை அடுத்து நேற்று விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. தீ விபத்து மற்றும் அவசர காலங்களில் செயல்படுவது குறித்து செயல் விளக்க ஒத்திகையில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close