[X] Close

முழு ஸ்கிரிப்டை ரஜினியிடம் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்

What-was-discussed-in-Rajinikanth-Karthik-Subbaraj-meeting-

ரஜினியிடம் முழு ஸ்கிரிப்பட்டை கார்த்திக் சுப்புராஜ் ஒப்படைத்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சந்தித்து பேசியுள்ளார். அவர் இயக்க இருக்கும் படம் குறித்து இருவரும் உரையாடியதாக தெரிகிறது. இந்தச் சந்திப்பின் போது கார்த்திக் சுப்ராஜ் தான் இயக்க உள்ள படத்தின் கதை அடங்கிய முழு ஸ்கிரிப்டை ரஜினியிடம் வழங்கியுள்ளார். அவர் தந்த ஸ்கிரிட்டில் ரஜினியின் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டுள்ள விதத்தை எடுத்து விளக்கியுள்ளார். மேலும், அவர் தன்னுடன் பணிபுரிய உள்ள டெக்னிஷன் பட்டியலையும் அளித்துள்ளார். அதனை பார்த்த ரஜினி, ‘உங்களது சுதந்திரம். நான் எதிலும் தலையிட மாட்டேன்’ என கூறியிருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யாரை அமர்த்தலாம் என்பது குறித்தும் இருவரும் பேசியுள்ளனர்.

இந்நிலையில் தற்சமயம் திரைப்பட உலகம் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு வருவதை குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர். இந்தப் போராட்டம் ஓய்ந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கலாம் என்றும் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close