[X] Close

வரலக்ஷ்மி சரத்குமாருடன் இணையும் விஜய் பட வில்லன்

Varalaxmi-to-face-Thalapathy-Vijay-s-villain-in-her-next

விஜய் படத்தின் வில்லன், நடிகை வரலக்ஷ்மி உடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

பெண் இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கி வரும் திரைப்படம் ‘சக்தி’. இந்தப் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்து வருகிறார். ‘சக்தி’ என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்புதான் பெண்களுக்கான ஒரு அமைப்பை வரு  தொடங்கினார். அதே பெயரை இயக்குநர் அவரது படத்திற்கு தலைப்பாக்கி இருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் வரு ஸ்டைலீஷ் ஆன ரோலில் நடிக்கிறார். அதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் முன்பே வெளியாகி இருந்தன. 

இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய்யின் ‘கத்தி’ படத்தில் நடித்த வில்லன் நடிகர் நீல் நிதின் முகேஷ் நடிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. பாலிவுட் நடிகரான இவர் ‘கத்தி’ படத்தில் தனது நடிப்பால் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தியவர். ஆனாலும் அவருக்கு அடுத்தடுத்த படங்கள் சரியாக அமையவில்லை. வரலக்ஷ்மி உடன் அவர் சேர்ந்து நடிக்க இருப்பதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவத் தொடங்கியுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close