Published : 09,Mar 2017 12:59 PM
பாவனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது

கன்னட தயாரிப்பாளர் நவீன், மலையாள நடிகை பாவனா திருமண நிச்சயதார்த்தம் திருச்சூரில் எளிமையாக நடந்தது.
கன்னட இளம் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக பாவனா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2014ம் ஆண்டிலேயே திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக பாவனா படங்களில் நடித்து வந்ததால் அவர்களது திருமணம் தள்ளிப் போனது.
இந்த நிலையில், பாவனா-நவீன் திருமண நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கொச்சியில் எளிமையாக நடந்ததாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிகழ்வில் பாவனாவின் நெருங்கிய தோழியும், நடிகையுமான மஞ்சு வாரியர் கலந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.