[X] Close

3 வகை கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்கு முதலிடமே இலக்கு

indian-team-aims-is-to-be-no1-in-all-formats

டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடம் பிடிப்பதே இந்திய அணியின் இலக்கு என தேர்வுக் குழுத் தலைவர்எ எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.


Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதாக எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார். இனி நடக்கவிருக்கும் ஒருநாள் மற்றும் டி20 ஓவர் போட்டிகளில் ஆட்டத்திறனை மேம்படுத்த திட்டம் இருப்பதாகவும் இதன்மூலம் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றும் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடர் முதல் 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் வரை இந்திய அணி 55 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளதாக பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன், போதிய அனுபவம் இந்திய அணிக்கு கிடைக்கும் என்றும் அதையடுத்து உலககோப்பையை வெல்ல இந்திய அணி கடுமையான முயற்சி எடுக்கும் என்றும் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close