[X] Close

பிச்சைக்காரர்கள் பட்டியல்: தமிழகத்துக்கு எந்த இடம் ?

National-Beggars-list--TN-holds-which-position--

இந்தியா ஏழை நாடு என்பதும், வளர்ந்துக்கொண்டிருக்கும் நாடு என்றும் வெளிநாட்டவர்கள் நம்மீது வைக்கும் பார்வை. மேலும், வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் நம் நாட்டின் மீது வெறுக்கும் விஷயங்களில் முக்கியமானது பிச்சைக்காரர்கள். நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அயல்நாட்டு பயணிகள் "இந்தியாவில் பிச்சைக்காரர்கள் தொல்லை தாங்கி முடியலைபா"என சொல்வதை கேட்டிருப்போம். ஒரு தனிமனிதன் பிச்சைக்காரனாக வாழ்வதற்கு காரணங்கள் ஏராளமான காரணிகள் உண்டு. ஆனால், உலக நாடுகள் அனைத்தும் தங்கள் தேசம் பிச்சைக்காரர்கள் இல்லாத பிரதேசமாக இருப்பதையே விரும்புகிறது. பிச்சைக்காரர்கள் நாட்டின் பொருளாதார சூழ்நிலையின் குறுயீடாகவும் கருதப்படுகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எவ்வளவு பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்ற பட்டியல் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலை கடந்த புதன்கிழமை அன்று மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் விஜய் சாம்ப்லா எழுத்து மூலமான அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்ற பட்டியல்தான் அது. இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் மொத்தமாக 4,13,670 பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள், அதில் ஆண்கள் 2,21,73 பேர் என்றும், பெண்கள் 1,91,997 பேர் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள்.


Advertisement

இதில் நாட்டிலேயே பிச்சைக்காரர்கள் அதிகம் இருக்கும் மாநிங்களில் மேற்கு வங்கம் முதலிடத்தில் இருக்கிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ ஆட்சி செய்யும் மாநிலத்தில் 81,244 பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ்க்கு முன்பு அம்மாநிலத்தில் 30 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் ஆட்சி செய்த போதும் பிச்சைக்காரர்கள் குறையவில்லை. இதில் வேதனை தரும் விஷயமாக அம்மாநிலத்தில் 48,158 பெண்கள் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் 65,835 பேரும், மூன்றாம் இடத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சி செய்யும் ஆந்திராவில் 30,218 பேர் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். இதற்கடுத்தபடியாக பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா  அஸாம், ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், குஜாராத் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடிக்கின்றன.

தென் இந்தியாவில் !

தென் இந்தியாவை பொருத்தவரை ஆந்திரா இந்திய அளவில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், தேசியக் கட்சி ஆட்சி இல்லாமல் 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் நாட்டில் பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் 6814 பேர் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள். பக்கத்தில் சின்ன மாநிலமான கேரளாவில் பல ஆண்டுகளாக கம்யூனிஸ்ட்டும், காங்கிரஸும் ஆட்சி செய்துள்ளனர். அங்கு 4023 பேர் பிச்சை எடுக்கின்றனர். கர்நாடகாவில் 12270, புதுச்சேரியில் 99 பேரும் உள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஒட்டுமொத்த பெரிய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை குறைவு. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close