[X] Close

பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம்

Congress-to-Move-No-confidence-Motion-Against-BJP-led-Central-Government

பாஜக தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.


Advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை காங்கிரஸ் குழு தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜனிடம் அந்தக் கடிதத்தை  அளித்தார். அதில் வரும் மார்ச் 27 ஆம் தேதி(செவ்வாய்கிழமை) இந்த தீர்மானத்தை அவையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். திங்கள்கிழமை நாடாளுமன்ற அமர்வு கிடையாது.

மக்களவையில் பாஜகவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிக்கு 48 எம்.பிக்கள் உள்ளனர். அதனால், மற்ற கட்சிகளின் உதவியை அது நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கெனவே நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால், தெலுங்கு தேசம், அதிமுக கட்சிகளின் கடும் அமளி காரணமாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரமுடியவில்லை. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close