தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளும் நாளை முதல் செயல்படும் என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான 8 சதவிகித வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், திரையரங்குகளின் இருக்கை எண்ணிக்கையை குறைக்க அனுமதிக்க வேண்டும், வருடத்திற்கு ஒருமுறை திரையரங்க உரிமத்தை புதுப்பிக்கும் முறையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையாக மாற்ற வேண்டும், திரையரங்க பராமரிப்புக் கட்டணம் ஏசிக்கு 5 ரூபாயும், ஏசி வசதி அல்லாததற்கு 3 ரூபாயும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16-ஆம் தேதி முதல் திரையரங்குகளை மூடி திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமைச்சர் கேசி வீரமணி தலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் வாக்குறுதி அளித்ததையடுத்து, வேலைநிறுத்தத்தை திரும்பப்பெறுவதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!