Published : 22,Mar 2018 01:52 AM

ஐபிஎல்-லில் முதல் முறையாக டிஆர்எஸ் அறிமுகம்!

IPL-to-feature-DRS-for-the-first-time


ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் இந்த வருடம் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் டிஆர்எஸ் முறை முதல் முறையாக அறிமுகமாகிறது.

 பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது. 


போட்டி குறித்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா கூறும்போது, ‘இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ் முறை, முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியும் ஒரு இன்னிங்சில் ஒரு முறை மட்டுமே நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யலாம். அந்த அப்பீல் வெற்றிகரமாக முடிந்தால் தொடர்ந்து அப்பீல் செய்ய முடியும்.

முகமது ஷமி மீது அவரது மனைவி கூறிய சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் நீரஜ்குமார் விசாரணை நடத்தி வருகிறார். அவரது விசாரணை அறிக்கைக்காக காத்து இருக்கிறோம். அது கிடைத்த பின் பிறகு முடிவு எடுக்கப்படும். இந்த போட்டி தொடரில் பேட்டிங்கில் சிறப்பாக ஆடும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும்’ என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்