Published : 09,Mar 2017 08:48 AM

பன்னீர்செல்வத்திற்கு கில்லட்டின் கதிதான் காத்திருக்கிறது: டிடிவி தினகரன்

TTV-dinakaran-alleged-O-Panneerselvam

பச்சை பொய்யர் பன்னீருக்கு கில்லட்டின் கதிதான் காத்திருக்கிறது என அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் நீதி விசாரணை அமைக்க வேண்டும் எனக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் நேற்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என அவதூறு பிரச்சாரம் செய்து பன்னீர்செல்வம் பிழைக்க பார்க்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

திமுகவின் பொம்மலாட்ட நூலில் ஆடும் போலி புனிதர் பன்னீர்செல்வம் என கூறியுள்ள டிடிவி தினகரன், பச்சை பொய்யர் பன்னீருக்கு கில்லட்டின் கதிதான் காத்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஜெயலலிதா இருந்தபோது எப்படி ஒற்றுமையாக செயல்பட்டு தேர்தல் பணியாற்றினோமோ அப்படியே இப்போதும் ஒற்றுமையாக செயல்பட்டு தேர்தல் பணியை மேற்கொள்வோம் எனக் கூறினார்.

பன்னீர்செல்வம் குறித்து மீடியாக்கள்தான் அதிகம் பேசுவதாகவும் தங்களை பொறுத்தவரை ஓபிஎஸ் என்பவர் ஜீரோ பி.எஸ் எனவும் தெரிவித்தார். இடைத்தேர்தலில் திமுகதான் தங்கள் எதிரி எனக் குறிப்பிட்ட டிடிவி தினகரன் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் யார் என்பது பற்றி ஆட்சிமன்றக்குழு முடிவு செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்