இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகிய இருவரும் இங்கிலாந்து ஓபனில் தங்கள் தொடக்க போட்டிகளில் வெற்றியை பதிவு செய்தனர்.
பி.வி.சிந்து வெறும் 29 நிமிடங்களில் டென்மார்க் வீராங்கனை மீட் பால்சனை 21-10, 21-11 என்ற கணக்கில் தோற்கடித்தார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு, உலகத் தர வரிசையில் ஐந்தாம் இடத்திற்கு இவர் முன்னேறினார். தற்போது இங்கிலாந்து ஓபன் தொடரில் வெற்றி பெற்று பட்டத்தை பெறும் முதல் இந்திய வீராங்கனையாவார் பி.வி. சிந்து என்ற எதிர்ப்பார்ப்பும் உள்ளது.
உலகத் தர வரிசையில் எட்டாம் இடத்தில் இருக்கும் சாய்னா நேவால் 38 நிமிடங்களில் ஜப்பான் வீராங்கனை நோஜோமியை 21-15, 21-14 என்ற கணக்கில் தோற்கடித்தார். காயமடைந்திருந்த சாய்னா இங்கிலாந்து ஓபன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் முழு உடல்தகுதியை எட்டினார்.
இவரும் இந்த தொடரில் வெற்றிகளைக் குவித்து, உலகத் தர வரிசையில் முன்னேற்றம் அடைவர் என எதிர்ப்பாக்கப்படுகிறது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்