[X] Close

எங்க எப்போனு சொல்லிட்டு வா ! - சவால்விடும் உதயநிதி

Actor-Udayanidhi-stalin-warns-those-trying-to-demolish-periyar-statue

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெரியார் சிலையை நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் உடைத்தனர். இதற்கு
பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தில்
"உறங்கியபின் உலவும் திருடர்கள்  போல, முதுகெலும்பில்லாத கோழைகள் சிதைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. துணிச்சல்
இருந்திருந்தால் முன்னறிவிப்பு செய்துவிட்டு வந்திருக்க வேண்டும் " என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


Advertisement

இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார் அதில்
"பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம்! ஒன்றை உடைத்தால் ஆயிரமாய், இலட்சமாய் முளைத்து
எழுவார்கள்! .உடைத்தெறிய உனக்கு  வலுவிருந்தால், இறுதியாய் நாள்,நேரம்,இடம் குறித்து விட்டு வா! உன்னை சந்திக்க பெரியாரின்
பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்" என உணர்ச்சி்ப் பொங்க பதிவிட்டுள்ளார். அண்மை காலமாக திமுக கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலின்
பங்கெடுத்து அரசியல் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement
[X] Close