[X] Close

அழுகும் முட்டைகோஸ்; வேதனையில் விவசாயிகள் 

Rotting-cabbage--In-agony-farmers

தருமபுரி மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த முட்டைகோஸ் அழுகி வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர் 

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த முட்டைகோஸ் அழுகி வருவதால் விவசாயிகள் மிகுந்த மன வேதனையடைந்துள்ளனர். பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால் அண்மையில் பெய்த மழையால் அனைத்தும் வீணாகிவிட்டது. ஏற்கெனவே காய்கறிகளின் விலை சரிவால், நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது முட்டைகோஸ் அழுகி வருவதால் கடுமையான இழப்பை சந்தித்துள்ள விவசாயிகள், நஷ்டத்திலிருந்து மீள்வது எப்படி என தெரியாமல் வேதனையில் முழ்கியுள்ளனர்.
 


Advertisement

Advertisement
[X] Close