ஏப்ரல் 12-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

ஏப்ரல் 12-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
ஏப்ரல் 12-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி காலமானார். எனவே அந்த தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும்.

இந்நிலையில் ஏப்ரல் 12-ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 23-ஆம் தேதி நடைபெறும் எனவும் வேட்புமனுக்கள் மீதான பரீசிலனை மார்ச் 24-ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுத் தாக்கலுக்கு ஒரே ஒருநாள் மட்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 27-ஆம் தேதி கடைசி நாள். ஆர்.கே.நகரில் பதிவாகும் வாக்குகள் ஏப்ரல் 15-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com