[X] Close

அம்பத்தூரில் 120 சவரன் நகைகள் கொள்ளை

Jewels-Theft-in--Ambattur

 

அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் 120 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அயப்பாக்கம் பாரதியார் நகரில் வசித்து வருபவர் லிங்குராஜ். இவர் வில்லிவாக்கத்தில் புத்தகக் கடை வைத்து நடத்தி வருகிறார். வெளிநாட்டில் உள்ள இவரது இரண்டு மகன்களில் ஒருவரான பிரகாஷ் என்பவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. பிரகாஷை மீண்டும் வெளிநாட்டிற்கு வழி அனுப்புவதற்காக அனைவரும் குடும்பத்தோடு நேற்று இரவு மீனம்பாக்கம் விமான நிலையம் சென்றிருக்கின்றனர். மீண்டும் அதிகாலை 3 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 120 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அதோடு, 1 கிலோ எடையுள்ள வெள்ளி நகைகள் பாத்திரங்கள் மற்றும் 1,40,000 ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக லிங்குராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close